கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் – சீமான் எதிர்ப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை ஏற்றுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். அதே நேரத்தில் பேனாவை கடலுக்குள் வைப்பதைத்தான் வன்மையாக நான் கண்டிக்கிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதை பார்வையிடப்போகும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவார்கள். அது சுற்றுச்சூழலுக்கு கேடு தரக்கூடியது. நீங்கள் பேனா வைத்தால் நான் அதை உடைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
கருணாநிதி நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் கற்களையும் மண்ணையும் கொட்ட வேண்டும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் இல்லை பேனா சின்னத்துக்கு எங்க இருந்து காசு வருது என்று பேசினார். அப்போது திமுகவினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிராக கூச்சலிட்டனர்.
நீ பேனாவை வை, ஒருநாள் நான் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார். சீமானின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ட்விட்டரில் #கடலில்பேனா வேண்டாம் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *