நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் மகள் சரசுவதி அம்மாள் மறைவு

செய்திகள் வட அமெரிக்கா

பிப்ரவரி 04, 2022 வெள்ளிக்கிழமை காலையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் மகள் திருமதி சரசுவதி அரங்கநாதன் அம்மையார் அவர்கள் மேரிலாந்தில் இயற்கை எய்தினார்.

திருமதி சரசுவதி அம்மையார் 1980ஆம் ஆண்டு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து தமிழ்ச்சங்கத்தை வழி நடத்தியவர். 1970, 1980களில் தமிழ் வகுப்பு நடத்தி இளையோர்களுக்குத் தமிழார்வம் ஊட்டியவர். தமிழ்ச்சங்கத்தின் அன்றைய வெளியீடான தென்றல் இதழின் ஆசிரியக்குழுவில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலர்களுக்குத் தமிழ்ப்பயிற்சி அளித்தவர். தமிழ் இலக்கியங்களைக் குறித்த கட்டுரைகள் பல எழுதியுள்ளார். நமது பகுதிகளில் நடந்த பல்வேறு தமிழ்ச்சமுதாய நிகழ்வுகளுக்கும் சிறப்புச் சேர்த்தவர். மேரிலாந்திலுள்ள முருகன் கோவிலின் அறங்காவலராக இருந்து பணியாற்றியவர். முருகன் கோவில் கட்டத் தொடங்கிய காலத்திலிருந்தே, பல வழிகளிலும் கோவிலின் வளர்ச்சிகளுக்கு உதவியவர். அம்மையார் அவர்கள் அனைவருடனும் மிகுந்த அன்புடன் பழகியவர். அம்மையார் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

துக்கத்தின் இந்த நேரத்தில், நமது இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
அவரது அன்புக்குரியவர்களின் துக்கத்தை கடவுள் அகற்றட்டும். தாய் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் வையம் எட்டட்டும்.

திருமதி சரசுவதி அம்மையார் அவர்களின் இறுதிச்சடங்குகள் குறித்த விவரங்கள்:
திருமதி சரசுவதி அம்மையார் அவர்களின் இறுதிச்சடங்குகள் குறித்த விவரங்கள்:

Saturday, February 12, 2022 from 11:00 AM – 1:00 PM at

Donaldson Funeral Home

1411 Annapolis Rd (Rt 175 E) Odenton, MD 21113

Tel: 1-410-672-2200

In place of flowers please consider a donation to the Murugan Temple of North America.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *