Skip to content
Monday, January 18, 2021
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
Nri தமிழ்

Nri தமிழ்

தமிழால் ஒன்றிணைவோம்

  • செய்திகள்
  • உலகம்
  • ஆரோக்கியம்
    • வீட்டு வைத்தியம்
    • சுய பிரகடனம்
  • உலக பொது நிகழ்வுகள்
    • வரும் நிகழ்ச்சிகள்
  • விவசாயம்
  • ஆன்மீகம்
    • சித்தர்கள்
  • NRI தமிழ் டிவி
  • சமூக ஊடகப்பதிவு

நாமக்கல் கவிஞர் அமரர் திரு வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் கடவுளைப் பற்றி இயற்றிய கவிதை

சமூக ஊடகப்பதிவு
May 3, 2019Nri தமிழ்

சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவது எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற்படுவன அவை என்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வது எவராலே?
ஆரிதற் கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ !

தண்ணீர் விழுந்ததும் விதையின்றி
தரையில் முளைத்திடும் புல் ஏது?
மண்ணிற் போட்டது விதையொன்று
மரம்செடி யாவது யாராலே?
கண்ணில் தெரியாச் சிசுவையெல்லாம்
கருவில் வளர்ப்பது யார்வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ !

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
எத்தனை ஊர்வன பறப்பன பார்!
எத்தனைப் பூச்சிகள் புழுவகைகள்!
எண்ணத் தொலையாச் செடி கொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள்!
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த் தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள்
அரன் அரி யென்பார் சிலபேர்கள்
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!
அந்தப் பொருளை நாம் நினைத்து
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம் !

எந்தப் படியாய் எவர் அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம் அதைவணங்கிடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

*கடவுள், தெய்வம், இறைநிலை, இயற்கை என்று அழைக்கப்படுவது அனைத்தும் ஒரேபொருள்தான். இதனை அறியாத மக்கள் பலர், பல கடவுள்களையும் பல மதங்களையும் உருவாக்கிக்கொண்டு, எம்மதமே உயர்ந்தது, எம் கடவுளே உயர்ந்தது என்று சண்டை  இட்டுக்கொண்டு இருக்கும் காலத்தில் எளியமுறையில், சிறார்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய வரிகளில்  கடவுளைப் பற்றி நமக்கு கவிதை அளித்துள்ளார்கள். அவரைப் போற்றுவோம்! வணங்குவோம்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)

Post navigation

பாரதி கண்ட புதுமைப்பெண்
தமிழ் இலக்கணமும் தொல்காப்பியமும்

தொடர்பு பதிவு

முத்தாலங்குறிச்சி காமராசு

April 13, 2019Nri தமிழ்

வாழை இலையும் – ஃபாஸ்ட் புட் கலாச்சாராமும்

May 3, 2019May 3, 2019Nri தமிழ்

டெல்டா மாவட்டங்கள் மறு கட்டமைப்புக்கு நாம் என்ன செய்யலாம்?

April 13, 2019April 14, 2019Nri தமிழ்


edificetravels

  • பொங்கலோ பொங்கல் 2021

    January 5, 2021January 18, 2021Team Nritamil
  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil

Nritamil.com

சமீபத்திய பதிவுகள்

  • பொங்கலோ பொங்கல் 2021

    January 5, 2021January 18, 2021Team Nritamil
  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil

எங்களை இணைக்கவும்

© 2019 NriTamil, Privacy Policy. | Theme: News Portal by Mystery Themes.
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்புகொள்ள
  • தனியுரிமை கொள்கை