
நாட்டின் மிகப்பெரிய பால் சந்தைகளில் ஒன்றான பெங்களூருவில் அமுல் மற்றும் நந்தினி என்ற இருபெரும் பால் பிராண்டுகள் போட்டி போடுகின்றன.
நந்தினி அதன் சந்தையைப் பாதுகாக்கும் முயற்சியில் தனது பாக்கெட் பாலுக்கான விலையை லிட்டருக்கு ரூ. 39 ஆகக் குறைதுள்ளது என பால் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமுல் அதன் பாலை கர்நாடக தலைநகரில் அதிக விலை புள்ளிகளுக்கு சில்லறை விற்பனை செய்து வருகிறது.
கர்நாடகா பால் கூட்டமைப்பு (KMF) மூலம் விற்பனை செய்யப்படும் நந்தினி, பெங்களூருவில் ஒரு நாளைக்கு 23 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து வருகிறது, இது பெங்களூருவின் பால் சந்தையில் 70% ஆகும், இதனை மேலும் ஒரு நாளைக்கு 33 லட்சம் லிட்டர் ஆக்குவதற்கான முயற்சி இது என்று பால் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இ-காமர்ஸ் சேனல்கள் வழியாக பெங்களூரு சந்தையில் நுழைவதாக அமுல் புதன்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் புயலை உருவாக்கியது, #SaveNandini மற்றும் #GobackAmul போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகி வருகின்றன.
“எங்கள் பாக்கெட் பால் பிராண்டுகளான அமுல் தாசா மற்றும் அமுல் கோல்டு, பெங்களூரில் ஒரு லிட்டர் ரூ.54க்கும், ரூ.64க்கும் கிடைக்கும்,” என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (ஜிசிஎம்எம்எஃப்) நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா கூறினார்.
“எங்கள் சமீபத்திய அறிவிப்பின் மூலம் இந்த ட்விட்டர் புயல் பற்றி நான் அறிந்திருந்தாலும், நாங்கள் இப்போது ஈ-காமர்ஸ்/விரைவு வர்த்தக சேனல்களை மட்டுமே பார்க்கிறோம் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். நாங்கள் தற்போது பொது வர்த்தகத்தைப் பார்க்கவில்லை. அதற்கு, விலைப் புள்ளிகளைக் குறைக்க வேண்டும். தற்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. மேலும் பெங்களூரில் அமுலின் நவீன வர்த்தக நுழைவு ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் நடக்கும்,” என்று மேத்தா கூறினார்.