நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு

இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இந்தியாவில் இன்னும் பல இனமக்கள் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அவர்களுக்கு அரசின் சலுகைகளும் கிடைப்பதில்லை. அவ்வாறான மக்களில் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் நரிக்குறவர் மக்கள் எந்த ஒரு அரசு பட்டியலிலும் சேர்க்காமல் அவர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனர். நரிக்குறவர் மக்களுக்கு எந்தவொரு நிலையான வேலையும் இல்லை. அவர்களுக்கு நிலையானதொரு இருப்பிடமும் இருப்பதில்லை.
பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நாடோடிகளா ஊர் ஊராக கொட்டகை அமைத்து வாழ்ந்து சில மாதங்களுக்கு பிறகு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிடுவர். அவர்களின் முதன்மையான தொழில் பாசிமணிளை கோர்த்து மாலையாக தயாரித்து தெருக்களில் விற்பதாகும். இப்படியிருக்க அவர்களுக்கு சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வங்கிகளில் தொழில் செய்யக் கடன், கல்வி நிறுவனங்களில் சேர இட ஒதுக்கீடு என எந்தவொரு பலனும் கிடையாது.
இதனை பல வருடங்களாக அரசுகளுக்கு கோரிக்கை வைத்த நரிக்குறவர் மக்கள், அதற்கு அரசுகளும் செவி சாய்க்காமலே இருந்து வந்தனர். இறுதியாக இன்று மத்திய அரசு நரிக்குறவர் மக்களை பழங்குடி பட்டியலில் இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு பழங்குடியினருக்கு ஒதுக்கும் இடஒதுக்கீடு, சலுகைகள் அனைத்தும் இவர்களும் இனி பெறக்கூடும். பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெற்று குடும்ப அட்டை, பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்க தகுந்த இடஒதுக்கீட்டில் இடங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *