ஆளுநர் மாளிகை முன்பாக பெற்றோல் குண்டு வீசிய சம்பவம்; என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் என அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ஆளுநர் மாளிகை முன்பாக பெற்றோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் உள்ளது உறுதி செய்யபட்டது. அதேபோல் பல்வேறு பெட்ரோல் குண்டு வீச்சு வழக்குகளில் அவர் சிறையில் இருந்தது உறுதி செய்யபட்டது.
இந்தநிலையில் தற்போது புழல் சிறையில் இருக்க கூடிய ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னனியில் யார் யார் உள்ளனர் என ஆளுநர் மாளிகை எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. கூட்டுசதி, வெடிபொருட்கள் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.