தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம்கொண்டாடப்படுகிறது.
ஒரு நாட்டில் பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பத்திரிகையாளர்கள் சமூகத்தின் கண்ணாடியாக, உண்மையை பிரதிபலித்து வருகின்றனர். பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூகத்தின் மீது பத்திரிகை மற்றும் பத்திரிகையாளார்கள் கொண்டிருக்கும் பொறுப்புகளின் அடையாளமாக, இந்த நாள் அதாவது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தையும் குறிக்கிறது.
இந்நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது எந்த நாடும் கைவிட முடியாத ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம் – மகாத்மா காந்தி
சுதந்திரமான பத்திரிகை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று – நெல்சன் மண்டேலா
ஒரு திறந்த சந்தையில் உண்மையையும் பொய்யையும் தனது மக்களை தீர்மானிக்க பயப்படும் ஒரு தேசம் அதன் மக்களைப் பற்றி பயப்படும் ஒரு தேசம் ஆகும் – ஜான் எஃப். கென்னடி