இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தோன்றிய அற்புத ஆடல் கலை பரதம். நம் தொன்மையான கோவில்களில் உள்ள சிற்பங்களில் காணப்படும் ஒவ்வொரு பாவமும் பரதத்தின் அங்கங்களே. உணர்ச்சிகளை தாளத்தோடு ராகம் சேர்த்து உள்ளத்திற்கு விருந்தளிக்கும் இக்கலையில் சிறந்து விளங்கும் தமிழர்களில் ஒருவர் செல்வி. கலை சந்திரசேகரம்.
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களில் பிரதான நாட்டிய பேரொளியாக விளங்கும் இவர் பாராட்டத்தக்க வகையில் பல இடங்களில் தனது நடனங்களை அரங்கேற்றியும் ஓர் ஆசிரியையாக நாட்டியக் கலை மற்றும் யோகக் கலைகளைப் பயிற்றுவித்தும் வருகிறார்.
கலை மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி செய்து பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் கலை சந்திரா பரதப் பள்ளியையும் தோற்றுவித்து நடத்தி வருகிறார். லண்டன், டொராண்டோ, சிக்காகோ மற்றும் நியூயார்க் நகரங்களில் இவரது பாராயணங்கள் பல்வேறு வகையான பார்வையாளர்களின் நல்வரவினைப் பெற்றன.
இவர் சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பெருநகரங்களில் நவராத்திரி விழாக்களில் நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார். சென்னை, பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் நாட்டிய திருவிழாக்களில் சிறப்புமிக்க அங்கமாக விளங்கி வருகிறார்.
தமிழ் மொழியில் இலக்கிய புலமை பெற்ற இவர் இசை மற்றும் நடனம் வாயிலாக பலருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
கலை சந்திரா நாட்டிய பள்ளியின் சிறப்பம்சங்கள்:
ஜெர்சி நகரத்தின் நியூபோர்ட் பகுதியில் ஆற்றங்கரையில் மரவேலைபாடு நிறைந்த இப்பள்ளியில் வார நாட்களிலும் வார இறுதியிலும் நாட்டியக் கலை மற்றும் யோகக் கலை பயிற்றுவிக்கின்றனர். பெருந்தொற்றைக் காரணம் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: dance@calai.com
மேலும் வாசிக்க : https://nritamil.com/business-directory/6348/kalai-chitra-naatiya-palli/