நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் – நெட்பிளிக்ஸ் ஒப்பந்தமும்

இந்தியா சினிமா தமிழ்நாடு

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா, பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஓர் தனியார் ரிசார்ட்டில் நடைப்பெற்றது. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்து தங்கள் ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் அறிவித்தனர்.
திருமணத் தேதி அறிவித்ததும் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. நயன்தாரா 2004ம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக “சந்திரமுகி” படத்தில் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். அதன்பின் பலப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கண்ணியாகவே மாறினார். நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது.
விக்னேஷ் சிவன் “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்பின் “நானும் ரவுடிதான்” படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளத்தில் இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர்களது திருமணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஷாரூக் கான், ரஜினிகாந்த், மணிரத்னம், விஜய் சேதுபதி போன்றவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு ரசிகர்கள், மீடியாக்களுக்கும் அனுமதியில்லை. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்கள், வீடியோக்கள் எதுவும் பொதுவெளியில் வராமல் மிகவும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
ஏனெனில் இவர்களது திருமணத்தை ஆவணப்படமாக ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதுவும் அதிக ஆவலைத் தூண்டியது. திருமணம் முடிந்து சில மணிநேரங்கள் கழித்தே விக்னேஷ் சிவன் தனது சமூக வளைதளத்தில் வெளியிட்டார். அதில் நயன்தாரா அணிந்திருந்த உடை, ஆபரணங்கள் வைரலாகியது. பல கோடி ரூபாய் மதிப்பில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமண ஆவணபடத்திற்கான முன்னோட்டமாக இப்போது டீசர் வெளியாகி இன்னும் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *