தென் கொரியா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியதால், பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தென்கொரியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதர்கள், தியாகிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் என இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சி்யோலின் இடோவான் என்ற இடத்தில் பிரபல சந்தைப் பகுதியில் நடைபெற்ற விழாவில், சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.
விழா நடந்த இடம் வெறும் 13 அடி அகலமே கொண்ட சிறிய பகுதி என்பதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியதால், பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.