நீட் தேர்வு முடிவுகள் 2022 வெளியாகியது, உத்திரபிரதேசம் முதலிடம், தமிழ்நாடு தேர்ச்சி விகிதம் கடும்சரிவு

இந்தியா செய்திகள்

மருத்துவச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதன் மதிப்பெண்கள் வைத்தே மருத்துவ சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டிலேயே ராஜஸ்தானை சேர்ந்த மாணவி தனிஷ்கா 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
நீட் தேர்ச்சியில் மஹாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை நீட் தேர்வு முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. 2020ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 57 சதவிகிதம், 2021ம் ஆண்டு 54 சதவிகிதமும், இந்தாண்டு அதைவிடக் குறைவாக 51 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட வருடம் முதல் தமிழ்நாடு விலக்கு கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டது. அதனை நிகாரித்தார் அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள். மீண்டும் 2021ம் ஆண்டு மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.