நீட்டா முகேஷ் அம்பானி அவர்கள் நிறுவிய கலாச்சார மையம் மார்ச் 31 ஆம் தேதி மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மகள் இஷா அம்பானியால் தொடங்கப்பட்டு இசை, ஆடை கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கைவினைக் கண்காட்சி என இதன் தொடக்க விழா களைக்கட்டியுள்ளது.
“இந்தியாவின் பல்வேறு பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதே கவனம்”நமது தேசத்திற்கு ஒரு அடையாளமாக இந்த கலாச்சார மையம் விளங்கும். இந்திய கலைகளைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மையம் செயல்பட உள்ளது” என்று NMACC இன் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி தொடக்க விழாவில் கூறினார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினகாந்த், இந்தி திரையுலகினர் உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “இந்தியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த பிராட்வே தியேட்டர் மும்பையில் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது! இதை சாத்தியமாக்கிய என் அன்பு நண்பர் முகேஷ் அம்பானிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்…! நீதா அம்பானி ஜி, இதுபோன்ற அற்புதமான, தேசபக்தி முன்னெடுப்புகளை செய்வதற்கும் மனதைக் கவரும் வகையில் நிகழ்ச்சியை நடத்தியமக்கும் உங்களையும் உங்கள் குழுவையும் வாழ்த்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்போது, இந்த அற்புதமான திரையரங்கில் ஒரு நாடகத்தை நடிக்க வேண்டும் என்ற ஏக்க கனவு ஒன்று உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று வாழ்த்தி பேசினார்.
வெள்ளிக் கிழமை மதியம் மும்பைக்கு வந்திறங்கிய நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ், அவர்களது மகள் மால்டி மேரி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாராவுடன்) , பாலிவுட்டின் கிரேட் கான்களான ஷாருக்கான் (மனைவி கௌரி, ஆர்யன் மற்றும் சுஹானாவுடன்), சல்மான்கான் , அமீர்கான் (சாதாரண குர்தா மற்றும் நீல நிற ஜீன்ஸ் உடையணிந்து, அவருடைய பல குழந்தைகளுடன்) கலாச்சார மையத்தின் சிவப்பு கம்பள அணிவகுப்பில் அணிவகுத்துச் சென்றனர்.