பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையம் – கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

இந்தியா சுற்றுலா செய்திகள் மற்றவை விவசாயம்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சென்னை மிக முக்கியமான நகரமாகம். பெருகி வரும் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் போன்றவைகள் தற்போதைய இன்றியமையாத ஒன்று. நகரத்தின் வளர்ச்சி அதன் சாலைகள், போக்குவரத்து வசதி மற்றும் இதர பிற அடிப்படை வசதிகள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் வந்து செல்ல சர்வதேச சுற்றுலா மட்டும் அண்ணிய செலாவணி வரத்து போன்றவைகளும் முக்கியமானது. இதற்கு விமான நிலையங்கள் அமைவது அவசியம். சென்னையில் ஏற்கனவே பன்னாட்டு விமான நிலையம் இருக்கிறது. தென்னிந்தியாவின் மையமாக சென்னையும், சென்னை விமான நிலையமும் இருக்கிறது. தென் மாநில மக்கள் பெரும்பாலும் சென்னை விமான நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். பல நாடுகளின் விமானங்கள் தரையிறங்க சரியான இடமாகவும் சென்னை இருக்கிறது.
பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் சரக்கு கையாளும் சூழ்நிலை இருப்பதால் இரண்டாவது விமான நிலையம் மிக மிக அவசியமாகிறது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ளது. விமான நிலையம் அமைய கிட்டத்தட்ட 4700 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது. அரசுக்கு சொந்தமாக 2400 ஏக்கர் நிலங்கள் உள்ளது. மீதமுள்ள நிலங்களை பரந்தூரில் உள்ள 13 கிராமங்களில் இருந்து எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஏற்கனவே 2018ல் பரந்தூரில் விமான நிலையம் அமைய பரிந்துரை செயய்யப்பட்ட போது கிராம மக்களின் கடும் எதிர்பால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்திய அரசு பரந்தூர் விமான நிலையம் தொடங்க முடிவெடுத்துள்ளதை அடுத்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விவசாய நிலங்கள், பலநூறு ஏரிகளை அழித்து விமான நிலையம் அமைய மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு எடுக்கப்படும் நிலங்களுக்கு மூன்று மடங்கு இழப்பீடு, புதுவீடு கட்ட இடம், மற்றும் வேலைவாய்ப்பு என அறிவித்தாலும் மக்கள் அதை ஏற்கமறுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *