கார்த்திகேய சிவசேனாபதி தலைவராக கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலவாரியம் அமைப்பு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசியல் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் விளையாட்டு

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு ‘வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதமாக, தலைவர், அரசுசார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழைய கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசு ராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வட அமெரிக்காவில் வசிக்கும் கால்டு வெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபால கிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறி ஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்ந்த உறுப்பினர்களாக – பொதுத் துறைச் செயலாளர், உள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர்.
நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *