நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020

உலக பொது நிகழ்வுகள்

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020, கிராமியக் கலை விழாவாகவும், பெருந்தலைவர் காமராசரின் 118வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியாகவும் நடைபெற உள்ளது.

பெருந்தலைவர் காமராசரின் 118வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியில், “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி” சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் அறம் சார்ந்த நிர்வாகத்திற்கு உதாரணமாக இருக்கிற ஐயா திரு.உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

கோடை விழாவின் “கிராமியக் கலை விழா” மதுரையில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைக் குழுவின் சுமார் 10 நாட்டுப்புறக் கலைஞர்கள் நாட்டுப்புறப்பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், காளியாட்டம் போன்றவற்றில் பங்கேற்க உள்ளனர்.

வரும் சனிக்கிழமை, சூலை 18ம் தேதி, அமெரிக்க நேரம் (EST), இரவு 8:30மணிக்கு கோடை விழா நிகழ்ச்சிகள் இணையம் மூலமாக ஒளிபரப்பாகிறது…

http://njtamilperavai.org/live

காணத்தவறாதீர்கள்…

தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்