அமெரிக்காவில் கலைகட்டிய தீபாவளி பண்டிகை. அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் சார்பாக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாக தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்தின் பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.
பண்டிகை என்றாலே அறுசுவை உணவு. அதனால் தமிழர்களின் பாரம்பரிய அஞ்சப்பர் செட்டிநாடு வாழை இலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக தம்பதிகளை ஊக்குவிக்கும் விதமாக திருவாளர்/திருமதி நியூஜெர்ஸி போட்டியும் நடக்கவிருக்கிறது. அக்டோபர் 22க்குள் விண்ணப்பிக்கலாம். இதன் இறுதிப் போட்டி 30ம் தேதி நடக்கவிருக்கிறது. மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ஒருசேர 30ம் தேதி அன்றே நடைபெறும்.
சமீபத்தில் உலகத் தமிழர்களை பெரிதும் கவர்ந்த பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் வினாடி வினா போட்டியும் நடைபெறவுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தில் ஆட்டம் பாட்டம் இல்லாமல் எப்படி..? விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர்ஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும் உண்டு. இதற்கான டிக்கட்டுகள் Njtamilsangam.org என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.