நாடு முழுவதும் பரவும் புதுவித வைரல் காய்ச்சல் – பயம் கொள்ளத் தேவையில்லை என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல்

ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி வீட்டு வைத்தியம்

நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு A H3n2 என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் A H3n2 வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் நாடு முழுவதும் பலரை பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு, A H3n2 வைரஸ்தான் காரணம் இது உயிருக்கு ஆபத்தானது இல்லை எனவும் சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவலை தடுக்கலாம் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *