நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் (New York Suffolk County Legislature) உலக தமிழ் நாள் அறிவிப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டே புரட்சிக்கவிஞர் *பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29*-யை *_உலக தமிழ் நாள்_* என்று *பிரகடனம் (Proclamation)* செய்தது நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழு (New York Suffolk County Legislature).
அதற்காக நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவிற்கும், ஆட்சிக்குழுவின் உறுபினர் *திருமிகு காரா ஹான் (Legislature Mrs. Kara Hahn)* அவர்களுக்கும், இம்முயற்சியை முன்னெத்து பிரகடனத்தைப் பெற்ற *நியூயார்க் தமிழ் கல்விக் கழகத்தின் அந்நாள் தலைவரும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இந்நாள் தலைவருமான _முனைவர் பாலா சுவாமிநாதன்_* அவர்களுக்கும் *புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்* தனது *பாராட்டுகளையும், நன்றிகளையும்* தெரிவித்துக்கொள்கிறது.
*_மேலும் இத்தகைய முயற்சியை அமெரிக்கா முழுக்க முன்னெடுக்கவும், புரட்சிக்கவிஞர் பிறந்தநாளை உலகத் தமிழ் நாளாக கொண்டாடவும் தமிழர்களை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் கேட்டுக்கொள்கிறது._*
நன்றி!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்