தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய தனது திரை பயணத்தை காமெடி, காமெடி கலந்த ஹீரோ என்ற லெவெலுக்கு தன்னை கொண்டு சென்றுள்ளார்.
இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், படலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தற்போது திரையுலகில் வலம் வருகிறார். குறுகிய காலத்தில் இவரது இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இவரது ரசிகர்கள் தான் காரணம். இவரது நடிப்பால் 2கே கிட்ஸை வெகுவாக கவர்ந்தார். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான நாயகனாக இவர் விளங்குகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு ஆடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதை விரைவில் படமாகவுள்ளதாகவும், அதில் நடராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இதனை நடராஜனும் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை சிவர்கார்த்திகேயன் இயக்கி நடிக்கவுள்ளதாக நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறுகையில், “என் பயோபிக்கை என் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகுதான் எடுக்கவேண்டும் எனச் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருக்கிறார். மேலும் இதனை அவரே இயக்கவும் உள்ளார் என நினைக்கிறேன்” என்றார்.
ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 ஆட்டத்தில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின்மூலம் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://nritamil.com/wp-content/uploads/2022/12/images-37.jpeg)