மும்பையில் இந்திய கலை மற்றும் கலைஞர்களை மேம்படுத்த நீடா அம்பானி கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சமூக சேவை சினிமா செய்திகள் நிகழ்வுகள் மண்மணம் முதன்மை செய்தி

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து இசை, ஆடை அலங்கார கண்காட்சி, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷோகலா மேதா, ரிலையன்ஸ் ரீட்டைல் தலைவர் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல், ரிலையன்ஸ் எனர்ஜி தலைவர் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published.