கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான யுத்தம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும் போரில் வெற்றி பெற்று விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போரில் உக்ரைனுக்கு பல ஐரோப்பிய நாடுகள் உதவி வந்தன. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சென்றுள்ளார்.
உக்ரைன் அதிபரை சந்தித்த அவர் உக்ரைன் அதிபருடன் போர்சேதங்களை நடந்தே வந்து பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களுடனும் அளவளாவினார். இந்த காணொளிகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் உக்ரைன் மக்கள் சிங்கம் போல ரஷிய படைகளை எதிர்த்து போரிட்டனர் எனவும், அவர்களின் வீரத்தை தான் மெச்சுவதாகவும், இங்கிலாந்து எல்லா வகைகளிலும் அவர்களுக்கு உதவி பக்கபலமாக நிற்கும் எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.