வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 தேதிகளில் கொண்டாடவிருப்பதை நன்கு அறிவீர்கள்.
விழா என்றும் நினைவில் நிற்கும்படியாக ஒரு பயன்தரும் மரக்கன்றோ அழகிய மலர் தரும் செடியோ உங்கள் இல்லத்தில் நட்டு ஒரு படம்பிடித்து அனுப்புங்கள். மகிழ்ச்சியை சங்கிலித் தொடராக்க உங்கள் நண்பர் ஒருவரை தொடுத்திடுங்கள் (tag).
#பெட்னா23_கன்று
#fsm2023_plant
#பேரவை23_கன்று
மேலே உள்ள மூன்றில் எதேனும் ஒரு சிட்டை (hashtag) யில் @fetnaConvention முகவரியைத் தொடுத்து கீச்சிடுங்கள் அல்லது முகநூலில் பதிவிடுங்கள்
விழா நாளன்று கீச்சுப் பக்கங்களை நேரலையில் பகிர்ந்திடுவோம்.
நீங்கள் நடும் மரம் தமிழ் போல் தழைக்கட்டும், பெட்னா போல் மலரட்டும், யாவரும் கேளிர் என நம்மைப் போலவே அதன் விழுதுகளும் வேரும் பரவட்டும்.
விழாவிற்கு பதிவு செய்ய அல்லது மேலும் தகவல் அறிய https://fetna-convention.org