தாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்

செய்திகள்

கோவிட்-19 கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு (தமிழகம்) திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக அரசு https://www.nonresidenttamil.org/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் ரீதியாகவோ அல்லது சுற்றுலாவிட்க்கோ சென்று காரோன காரணமாக தமிழ்நாடு திரும்ப முடியாமல் உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். தமிழக அரசு பொதுத்துறை, அந்த பதிவுகளை ஆராந்து அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.