ஏப்ரல்-நவம்பர் 2021ல் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்பு நிதி விகிதம் 62 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய வங்கிகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் பாதுகாப்பான புகலிடமாக கருதி தங்களது சேமிப்பை வைப்புத்தொகையாக வருடந்தோறும் செலுத்தி வருகின்றனர். இத்தகைய வைப்புத்தொகை பொதுவாக அதிக வருமானத்தைப் பெற இந்திய வங்கிகளுக்குப் பெரிதும் பயன்படுகிறது.
இந்நிலையில் இந்நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் வைப்புத்தொகை 62 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது, இதனால் முதலீட்டு பங்குகளின் ஆபத்து-வெகுமதி விகிதாச்சாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வட்டி வீழ்ச்சி நிகழ்ந்து வருமானமும் குறைந்துள்ளது.
சமீபத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி ”பல்வேறு என்.ஆர்.ஐ டெபாசிட் திட்டங்களுக்கான நிகர வரவு, இந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாதங்களில் $2.6 பில்லியனாக சரிந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் $7 பில்லியனாக இருந்தது. ஏப்ரல்-நவம்பர்’21ல் வங்கி அமைப்பில் இந்தியாவில் வைப்புத்தொகை 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 7.5 சதவீதமாக இருந்தது.”
இதனால் மேலும் பொருளாதார பின்னடைவுகள் ஏற்படக்கூடும். இந்திய நாணயத்திற்கு நிகரான டாலர் மதிப்பு மேலும் அதிகரிக்க கூடும். கோவிட் பரவல் மக்கிளின் வாழ்வியலை பல வகைகளில் பாதித்துள்ளது. மீண்டு வருவோம்!