7ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வந்த தமிழரை மீட்டு தாயகம் அனுப்பிய சவூதி அரேபியா NRTIA
சவூதி அரேபியாவின் சட்டப்படி காலாவதியான ஒர்க் பர்மிட் உள்ளவர்கள் நாடு திரும்ப 15,000 ரியால் (சுமார் 3 லட்சம் இந்திய ருபாய்) அபராதம் கட்டனால் மட்டுமே நாடு திரும்ப முடியும்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சார்ந்த செல்வராஜ் அவர்களின் மகன் நாகராஜ் கடந்த 7 வருட காலமாக சவூதி அரேபியாவில் முறையாக அனுமதியின்றி (ஒர்க் பர்மிட் இல்லாமல்) பணி செய்து கொண்டிருந்ததால் தாயகம் செல்ல வழி இல்லாமல் சிக்கி தவித்து வந்தார். எவ்வித வசதியும் இல்லாத நாகராஜ் சுமார் 15000 ரியால் அபராதத் தொகை செலுத்தினால் மட்டுமே தாயகம் திரும்ப முடியும் என்ற நிலையில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அண்ணன் திரு. மனோ தங்கராஜ் மற்றும் பாலூர் தேவா ஆகியோரின் கேட்டுக்கொண்டதன் படி சவூதி அரேபியா NRTIA களம் கண்டு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் இந்தியத் துதரகத்தின் உதவியுடன் சவூதி அரேபியா அரசாங்கத்தின் கருணையினால் மேற்குறிப்பிட்ட அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டு நாகராஜ் சட்டபூர்வமாக இறுதி பயண சான்றிதழ் பெற்று நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்,
இப்பனியை சிறப்பாக கையாண்டு நாகராஜ் நாடு திரும்ப உதவியவர்கள் சவூதி அரேபியா
தம்மாம் அயலக அணியின் முதன்மைச் செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேசன்,
NRTIA அமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல்,
கமால் பாட்சா, சீனி முஹம்மது, ஏர்போர்ட் கணேசன், கள்ளக்குறிச்சி ஃபாரூக் பாய், மற்றும் தம்மாம் NRTIA நிர்வாகிகள்