டெல்டா மாறுபாட்டை விட இந்த ஒமிக்ரான் மாறுபாட்டு வகை தொற்று வேகமாகப் பரவக்கூடியது என்று மாநில சுகாதார செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிடுகையில், மத்திய சுகாதாரச் செயலர் அவர்கள், புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து தனக்கு கடிதம் எழுதியதாகவும், மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறிவுறுத்தல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
புதிய மாறுபாடு (Omicron) டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது ‘நோயெதிர்ப்பிலிருந்து தப்பிக்கும் திறன்’ மற்றும் வேகமாக பரவும் திறனைக் கொண்டுள்ளது என்றும், இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் Omicron இன் பரவலானது ‘அதிகமாகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரான்’ மாறுபாட்டால் இயக்கப்படும் கோவிட்-19 இன் மற்றொரு எழுச்சி ஏற்பட்டால், அதன் விளைவுகள் ‘கடுமையானதாக’ இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார். கண்காணிப்பு மற்றும் கள அளவிலான விசாரணைகளை மேம்படுத்துதல், முகமூடிகளின் பயன்பாடு, உடல் ரீதியான இடைவெளி மற்றும் கை சுகாதாரம் பேணுதல் ஆகியவை கோவிட்-19 மற்றும் ஒமிக்ரானின் பரவலைக் குறைப்பதில் முக்கியமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளைப் புரிவதற்குத் தேவையான திட்டங்களை வகுப்பதிலும் கோவிட 19 இன் மாறுபாட்டு எழுச்சிகளுக்குப் பதிலளிப்பதற்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு வளங்கள் இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக கோவிட தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி கொள்வதன் மூலம் நோயை எதிர்த்து போராட முடியும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் ஒமிக்ரான் வைரஸை கண்டு பதற்றம் அடைய தேவையில்லை என்று டிசம்பர் 5 அன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் பேட்டியளித்துள்ளார்.
நமக்காக அரசு ஒருபுறம் உழன்று கொண்டிருக்க போன வாரம் காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்டில் மக்கள் நெரிசலில் மூச்சு விட கூட இடம் இல்லையாம். கர்நாடகாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது அலட்சியம் நம்மீது பிரியம் வைத்துள்ளவர்களைப் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நெறிமுறைகளைக் கையாள்வோம்!