சென்னையில் மாநகர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

சென்னையில் மாநகர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் வாகன பயன்பாட்டை குறைத்து போக்குவரத்தை நெருக்கடியையும் குறைத்து மெட்ரோ ரயிலில் பயணிப்போர் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (National Common Mobility Card – தேசிய பொது இயக்க அட்டை) அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில், பேருந்து, புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம்.
அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபே தொழில்நுட்பம் இதன் அடிப்படையாகும். இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது.
சிங்கார சென்னை அட்டையின் முக்கிய அம்சங்கள்:

  1. இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  2. இந்த அட்டையை இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தலாம்.
  3. குறைந்தபட்ச KYC உடன் எளிதான பதிவு செயல்முறை.
    முதற்கட்டமாக, 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் (கோயம்பேடு மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ, விமான நிலையம் மெட்ரோ, உயர்நீதிமன்றம் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ, கிண்டி மெட்ரோ) தேசிய பொது இயக்க அட்டை வழங்கப்படும். தேசிய பொது இயக்க அட்டைகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பு கேட்களிலும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published.