உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் நாடுகளின் பணவீக்கமும் உயர்ந்து வருகிறது. பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலைமை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கவலை தெரிவித்துள்ளார்.
போரின் காரணமாக வரும் காலத்தில் உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, பசி, பஞ்சம் போன்ற பிரச்னைகள் உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் வாய்ப்புள்ளது’ இது குறித்து நாம் இப்பொழுதே விழிப்புணர்வு கொண்டு செயல்பட வேண்டும் என கவலை கொண்டார்.