அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா கோலாகலமாக தொடங்கியது

உலகம் செய்திகள் வட அமெரிக்கா விளையாட்டு

அமெரிக்க ஒபன் வருடந்தோறும் நடைபெறும் சாம்பியன்ஷின் போட்டியாகும். இது டென்னிஸில் விளையாடப்படும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஒன்றாகும். இது அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் வருடந்தோறும் நடைபெறும் டென்னிஸ் திருவிழாவாகும். பிரன்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் வரிசையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடைசி கிராண்ட்ஸ்லாம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகும்.
அமெரிக்க ஓபன் பட்டம் 1881ம் ஆண்டு முதல் விளையாடப்படுகிறது. அமெரிக்க ஓபன் தொடங்கிய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டியாக இருந்தது. பிறகு எட்டு ஆண்டுகள் கழித்தே பெண்கள் ஒற்றையர் ஆட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஓபன் ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர், பெண்களில் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என மேல்கண்ட பிரிவுகளில் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மட்டுமே தொடங்கியது முதல் தற்போது வரை எந்த ஆண்டும் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஓபன் டென்னிஸில் ஜூனியர், சீனியர் மற்றும் சக்கர நாற்காலி வீரர், வீராங்கனைகளுக்கான பிரிவுகளும் நடத்தப்படுகின்றன. அமெரிக்க ஓபன் நடைபெறும் ஸ்டேடியத்தில் மொத்தம் 22 டென்னிஸ் மைதானங்ள் உள்ளது. இதில் மெயின் கோர்ட் என்று அழைக்கப்படும் சென்டர் கோர்ட் மட்டும் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் அமைர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு பெரியதாகும்.
இந்த டென்னிஸ் தொடர் முறையே புல்தரை, களிமண் தரை, கடினமான தரைகளம் கொண்ட மைதானம் என இந்த மூன்று வகைத் தரைகளில் விளையாடப்படுகிறது. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் டேனில் மெட்வேடேவ், ரபேல் நடால் போன்றோர்களும், பெண்கள் பிரிவில் அமெரிக்கர்களான வில்லியம்ஸ் சகோதரிகள் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை நடந்தப் போட்டிகளில் 2022ம் ஆண்டு மட்டும் கொரோனா தொற்றின் காரணமாக பார்வையாளர்களே இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வெற்றிப் பெறுவோருக்கு 60.1மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இத்தாண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை ஈஎஸ்பிஎன் தொலைகாட்சி நிறுவனம் ஒளிபரப்பு உரிமையைப் பெற்று நேரலை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.