இந்திய ராணுவ அக்னிபாத் திட்டம் 2023இன் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்பிக்க பிப்ரவரி 16 முதல் முதல் மார்ச் 15 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்னிவீர் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும்.
இந்திய ராணுவ அக்னிபாத் 2023 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் உடல் தகுதி தரவுகளை சரியானது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்தில் சேர விரும்புவோர் 17வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 21 வயதுக்கு உட்ப்பட்டவர்களாகவும் இருத்தல் அவசியம். தகுதி அளவுகோல்களின்படி, விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் போதுமான உடலமைப்புடன் இருக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்க்கு ஆட்சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும்.