விடுமுறை நாட்களை ஒட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதில் மலர்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் இடம்பெறும். இந்த முறை அதன் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. முதல்வர் ஊட்டியில் உள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளை மிகுந்த அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அது சரிய காரணம் அதன் கட்டமைப்பு சரியாக இல்லாததா அல்லது ஏதேனும் நாசவேலை காரணமா என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.