விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்ற 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *