பச்சை கிளியும் பரந்த மனமும்

செய்திகள்

சென்னை, சிந்தாதிரிபேட்டையில் திரு. சுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பச்சை கிளிகளுக்கு பரந்த மனப்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாக உணவு அளித்து வருகிறார். அதிகாலை 6.30 மணிக்கு, மொட்டை மாடியில், கிளிகள் கூட்டம் உண்ண ஆரம்பித்துவிடும்.

ஆரம்பத்தில் ஐந்து ஜோடி கிளிகள் வந்தன, ஒவ்வொரு நாளும் கிளிகளின் வருகை அதிகரித்து ஆயிரக்கணக்கில் ஆகி இப்போது ஆறு ஆயிரம் கிளிகள் வருகை புரிகின்றது. இதனைப் பற்றி திரு. சுதர்சன் அவர்கள் கூறுகையில், என்ன விதமான கவலைகள் இருந்தாலும் போய்விடும் என்றும், மனது சந்தோசமாக இருந்தால் எந்த வியாதியும் கிட்ட நெருங்காது என்றும், இத்தனை கிளிகளுக்கு நான் தந்தையாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

மேலும் திரு.சுதர்சன் அவர்கள் கிளிகளைப்பற்றி கூறும்போது அவைகள் சாப்பிடும்போது பார்க்கவே அழகாக இருக்கும் என்றும், அதன் சத்தம் கேட்கும்போதும் மனதுக்கு இதமாக இருக்கும் என்றும் மரம் இன்றி பறவைகள் தத்தளிக்கின்றன என்றும் பரிதாபப்படுகிறார்.

திரு. சுதர்சன் அவர்கள் தினமும் கிளிகளை பாதுகாத்து மகிழ்ச்சி அடைகிறார், எப்போதாவது உணவு வைக்கவில்லை என்றால் கோபித்துக்கொண்டு ஒரு கூட்டமே வராது என்கிறார். மேலும் கிளிகளுக்கு பழங்கள், ஊறவைத்த அரிசி போன்றவை உணவாக அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற பல பறவைகள் மூலமாக நிறைய மரம் வளர்கின்றன, பல அதிசயங்கள் செய்கின்றன, நாமோ சுலபமாக மரத்தை வெட்டி விடுகின்றோம், அதனை வளர்ப்பது கடினம் என்றும் திரு. சுதர்சன் அவர்கள் கூறுகின்றார்.

நன்றி:Behind Woods Air