அமெரிக்க அதிபருக்கான இரகசிய போலீஸ் பிரிவில் பாகிஸ்தான் உளவாளிகள்

உலகம்

அமெரிக்க அதிபருக்கான பாதுகாப்பு போலீஸ் மற்றும் உளவுத்துறையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இருவரில் அரியன் தஹெர்ஜடேஹ் என்பவர், அமெரிக்க ரகசிய போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையில் பணியாற்றி வந்தவர்களுக்கு வாடகையற்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, ஐ-போன், கண்காணிப்பு சாதனங்கள், ட்ரோன், போன்றவறை இலவசமாக வழங்கி உள்ளார். மேலும் அரசு வாகனம் என, வாகனங்களையும் வழங்கி உள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, தஹெர்ஜடேஹ் மற்றும் ஹெய்தர் அலி ஆகிய இருவரும், வாஷிங்டன்னில் தங்கியிருந்து தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பல இடங்களில் வீடியோ கேமராக்கள் பொருத்தி வேவு பார்த்துள்ளனர். அங்கு வசித்தவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்டு, அவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்தது தெரியவந்துள்ளது.
பரிசுப் பொருட்கள் இலவசங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தது விசாரனையில் தெரிய வந்துள்ளது.அவர்களை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *