பன் முகம் கொண்ட பௌர்ணமி – ரெட் மூன்

ஆன்மீகம் செய்திகள்

நிலவு யாருக்குத்தான் பிடிக்காது. கவிஞர்கள் ஆன்மீகவாதிகள் விஞ்ஞானிகள் என்று நிலவு அவர்களை ஒரு வழி செய்துவிடுகிறது.

அதிலும் குறிப்பாக பௌர்ணமி நிலவைப் பற்றி கூறவே வேண்டியதில்லை.

விஞ்ஞானிகளின் பார்வையில் நிலவுக்கு என்று ஒரு பிரத்தியேக அடையாளமே இருக்கிறது.

மாதம் ஒருமுறை மட்டும் வரும் பவுர்ணமிக்கு ” ஃபுல் மூன் டே ” எனவும்.

மாதம் இருமுறை வரும் பௌர்ணமியை ப்ளூ மூன் டே எனவும் அழைக்கிறார்கள்.

இந்தச் சந்திரகிரகணம் ஆனது இத்தகைய பௌர்ணமி தினத்தில் தான் வரும்.

இன்று ஒரு சந்திரகிரகணம் நடைபெற இருக்கிறது. அதை பிளட் மூன் டே எனவும் ரெட் மூன் டே எனவும் அழைக்கிறார்கள்.

பூமியின் சுற்றுப்பாதையில் , சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு இடர் படுவசந்திரகிரகணம் என்பார்கள்.

இன்று அப்படி ஒரு அதிசய நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இதை மேற்கு ஆசியா ஆஸ்திரேலியா போன்ற வெகு சில நாடுகளிலிருந்து மட்டுமே காண முடியுமாம். இந்தியாவில் இருந்து இந்த ரெட் மூன் தெரியாதாம்.

பௌர்ணமி ஒரு ஆன்மீக அதிசயம்

பௌர்ணமி தினத்தில் பொதுவாக நிலவு மிக நீண்டு காணப்படும் ( வட்டவடிவில் ) . அந்தக் குளிர்ந்த நிலவின் ஒளியானது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடியது.

இந்த நிலவின் ஒளியின் மகிமையை அறிந்த நமது முன்னோர்கள் அதற்காகவே பிரத்யேக வழிபாடுகளை வழி வகுத்திருந்தார்கள்.

பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதினால் அந்த நிலவின் ஒளியானது பரிபூரணமாக நமது உடலில் ஒரு நேர்மறை எண்ணங்களை பரவவிட்டு ஆன்மிக சக்தியை அதிகரிக்க வைக்கிறது.

பௌர்ணமி தினத்தன்று சுற்றம் மற்றும் குடும்பத்துடன் கூடி ஆற்றங்கரையிலும் , கடற்கரையிலும் அமர்ந்து கூட்டமாக சாப்பிட்டு., அன்று இரவு பொழுதை கேளிக்கையாகவும் கழித்து வந்தார்கள் நமது பண்டைய தமிழர்கள்.

பௌர்ணமி தினத்தன்று இறைவனின் விஸ்வரூப மூர்த்திகளை தரிசிப்பது அதிக பலனை கொடுக்கும்.

அப்படி விஸ்வரூபம் மூர்த்திகள் இல்லாத ஊர்களில் உள்ள நெடிய ஆல மரத்தையும் , அரச மரத்தையும் தரிசிப்பது உன்னதம் என்று கூறியிருக்கிறார்கள் சித்தர்கள்.

பௌர்ணமி விரதம் :

இன்றளவும் மிகப் பிரசித்தம் இந்த விரதம் மாங்கல்ய பாக்கியமும் கணவனின் தீர்க்க ஆயுளை வேண்டி பௌர்ணமி தினத்தன்று விரதம் இருப்பார்கள்.

காலை முதல் எந்த உணவு உட்கொள்ளாமல் விரதமிருந்து இரவு முழு நிலவை பார்த்த பின்பு பால் பழம் உண்டு விரதத்தை முடிப்பார்கள் வருடத்தில் இப்படி 12 பௌர்ணமிகள் விரதமிருந்து வேண்டிய வரங்களை பெற்று வருகிறார்கள்.

இந்த பௌர்ணமி திருநாளில் சகல நற்பலன்களையும் வேண்டி சத்யநாராயண பூஜை செய்து வழிபடுவார்கள்.

பௌர்ணமி அன்னை அபிராமியின் சொரூபம்:

பௌர்ணமி தினத்தன்று தேவி வழிபாடு மிகப் பிரசித்தம்.

அத்தகைய அன்னையின் அருளை நாம் பௌர்ணமி தினத்தன்று பரிபூரணமாக பெற முடியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

சா.ரா

Leave a Reply

Your email address will not be published.