ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல திட்டம் – ஈராக் நபர் கைது

NRI தமிழ் டிவி வட அமெரிக்கா

முன்னாள் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் மே 24ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு பார்வையாளர் விசாவில் அமெரிக்கா வந்தவர் ஆவார். எப்பிஐ., அமைப்புக்கு ரகசிய தகவல் அளிக்கும் நபர் ஒருவரை தொடர்பு கொண்டு, இவர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்லும் திட்டம் குறித்து விளக்கி உள்ளார். ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், பல ஈராக்கியர்களை கொன்று அகதிகள் ஆக்கியதற்கும் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இவர் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பகர் அல் பாக்தாதியின் உறவினர் எனவும், சதி திட்டத்தை நிறைவேற்ற மெக்சிகோ எல்லை வழியாக 4 ஈராக்கியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து விரவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இவரைக் கைது செய்துள்ள அமெரிக்க உளவுத்துறை இவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் குற்றம்சாடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *