உலகம் பல்வேறு மாறுதல்களை சந்தித்து வருகிறது. இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மாற்றத்தில், தட்பவெப்பநிலை மாற்றம் மிகவும் மோசமானது. இந்த வானிலை மாற்றத்தால் மழையின் அளவு அதீத அளவிலும், குளிர்/வெயில் வழக்கத்து மாறாகவும் காணப்படுகிறது. இதனோட சேர்த்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழி அதாவது பிளாஸ்டிக் உலகை அச்சுறுத்தும் மற்றொரு முக்கியமான மாசு.
நாம் அன்றாடம் பயன்டுத்தும் பாட்டில், கைப்பை, உணவு பொட்டலங்கள், சில அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டவைகளாக உள்ளன. இதனால் அதனை பயன்படுத்தி வீசும் பட்சத்தில் அது அவ்வளவு எளிதால் மக்காத காரணத்தால் பிளாஸ்டிக் டன் கணக்கில் சேறுகின்றன. இதனால் சுற்றுப்புறச் சூழல், விளங்கினங்கள் என அனைத்து தரப்பும் பாதிக்கப்படுவதாக அமைந்து விடுகிறது.
நாளுக்குநாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதால் அதனை ஒழிக்கும் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் குப்பைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கானது மண்ணையும் மாசுப் படுத்துகிறது.
இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் தடை என்பதை அனைத்து உலக நாடுகளும் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. இதனால் கடைகளில் மற்றும் அனைத்து இடங்களிலும் பயன்படும் ஒருமுறை பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பைகள்/கவர்கள் தடை செய்யப்பட்டன. ஜூலை 2022 முதல் நாடு முழுவதும் நெகிழித் தடையென மத்திய அரசும் அமலுக்கு கொண்டு வந்தது.
தற்போது கடற்கரையோரம் இவ்வாறான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்துவது என்ற அறிவிப்பை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே மலை பிரதேசங்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.