ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
இன்றைய விளையாட்டு உலகில் கிரிக்கெட் என்பது கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. 5 நாள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வரவேற்பு இருந்தது.
வானொலி பெட்டிகளில் கிரிக்கெட் வர்ணனை கேட்டு ரசிகர்கள் மகிழ்ந்த காலம் போய், தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் ஒரு நாள் போட்டிகளைக் கண்டு களிக்கும் மாற்றம் கண்டது கிரிக்கெட்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் தலா ரூ.95 கோடி செலவிட்டு வீரர்களை தேர்வு செய்யலாம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தொகை ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்த அளவு வீரர்களே ஏலம் விடப்பட உள்ளதால், ஒரே நாள் மட்டுமே இந்த ஏலமானது நடைபெறும்.
இந்த ஆண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட அனைத்து அணிகளும் முன்னணி வீரர்களை கழற்றிவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், கேமரூன் க்ரீன் போன்றோர் ஏலத்தில் பங்கேற்றால், அவர்களை தேர்வு செய்ய பலத்த போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.