கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வானொலி ஊடகத்தை பிரதமர் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. இதில், பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் நாட்டிற்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலி பார்லே பகுதியில் மான் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதேபோல, கன்டிவாலி பகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.