உத்தர பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ள,’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் துவக்கி வைத்தார்.
இதற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது காலை நிகழ்ச்சி வந்த பிரதமர் மோடியை உ.பி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் வரவேற்றனர்.
விழாவிற்கு பிரதமர் மோடி தமிழ்முறைப்படி வேட்டி, சட்டையில் வந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதி வாரணாசி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார்.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இளையராஜா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்றினர்.