பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் இந்தியாவின் 5 ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸின் (ஐஎம்சி) 6 வது பதிப்பைத் தொடங்கி வைத்தார் மற்றும் இந்தியாவின் 5 ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
5ஜி சேவையின் முதல் கட்டமாக 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் திறனைக் காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் பயன்பாட்டு வழக்கை பிரதமரின் முன் செய்துகாட்டினார்கள். 5G தொலைத்தொடர்பு சேவைகள் தடையற்ற கவரேஜ், அதிக டேட்டா வேகம் மற்றும் மிகவும் நம்பகமான தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை வழங்க முயல்கின்றன.
அதே சமயம் ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இம்மாதம் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
முதலில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்கள் உட்பட பல நகரங்களில் 5G சேவைகளை தீபாவளிக்குள் வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக நெட்வொர்க் நிறுவனங்கள் முதலில் நாடு முழுவதும் உள்ள சில நகரங்களில் 5G ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதில் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகியவை அடங்கும்.
