தமிழகம் எத்தனையோ தலைச்சிறந்த விடுதலை போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்களென கண்டிருக்கிறது. அவர்களை பாடப் புத்தகங்களிலும், செவி வழிச் செய்தியாகவும் மட்டுமே கேட்டிருப்போம், அறிந்திருப்போம்.சமகாலத் தலைசிறந்த தலைவர்களில் கம்யூனிசத் தலைவர் நல்லுகண்ணு அவர்கள். தூத்துக்குடியில் 1925ம் ஆண்டு பிறந்த இவர், கம்யூனிசக் கொள்ளையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தனது 15வது வயதிலிருந்தே போராட்டங்களில் ஈடுபட்டவர்.
கம்யூனிசப் போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் 14ஆண்டுகள் சிறைவாசம் பெற்ற வரலாறு கொண்டவர். இவரின் நன்னடத்தைக் காரணமாக 7 ஆண்டுகளில் விடுதலைப் பெற்றார். வயது 96 ஆண்டுகள் கடந்தாலும், தீவிர அரசியலிலிருந்து சற்று விலகியிருந்தாலும், இன்றும் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பவர். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதம் அம்மாள். மற்றும் இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு.
இவரது 80ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு கட்சியினர் 1கோடி இவருக்கு பரிசாக அளித்தனர். அதனை ஏற்க மறுத்து, அதனை தமிழக அரசின் வளர்ச்சி நிதிக்கு அளித்துவிட்டார். 2022ஆம் ஆண்டுக்கான “தகைசால் தமிழர்” என்ற விருதினை சுதந்திரத் தினத்தன்று நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கிப் பெருமைச் சேர்த்தது. அந்த விருதோடு 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அத்தோடு 5ஆயிரம் ரூபாய் சேர்த்து மீண்டும் தமிழக அரசுக்கே வழங்கி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
அரசியல் ஆர்வமுள்ள இன்றைய இளையத் தலைமுறைக்கு இவர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இன்றுவரை சொந்த வீடு இல்லாமல் தமிழக அரசு ஒதுக்கிய வீட்டுவசதி நலவாரியம ஒதுக்கிய வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். கட்சிக்காரர் ஒருவர் இவருக்கு கார் வாங்கித் தருவதாக கூறியபோதும், அதனை ஏற்க மறுத்துவிட்டார். இன்றுவரை ரயில் மற்றும் பேருந்தில் மட்டுமே பணிக்கிறார்.