புதுவையில் வணிகத் திருவிழா 75 சவரன் தங்கம் முதல் பரிசென கலைகட்டபோகும் விழா – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

அரசியல் இந்தியா சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி வணிக திருவிழா 2023 வரும் ஜனவரி 5ம் தேதி துவங்குகிறது.
நிதி நெருக்கடி மற்றும் நிர்வாக குழப்பம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு வணிக திருவிழா நடத்தப்படவில்லை. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வணிக திருவிழா நடத்த அரசு முடிவு செய்து, சுற்றுலாத்துறை அதற்கான திட்டத்தையும் உருவாக்கியது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பரிசு கூப்பன் 10 ரூபாய். 100 பரிசு கூப்பன் கொண்ட புத்தகத்தை 1,000 ரூபாய்க்கு வணிக நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.
குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் ஒரு நபருக்கு பம்பர் பரிசாக 75வது சுதந்திர தின ஆண்டை குறிக்கும் வகையில் 75 சவரன் (அரை கிலோ) தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 20 கார்கள் முதல் பரிசாகவும், இரண்டாவது பரிசாக ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டர் 40 நபர்களுக்கும் மூன்றாவது பரிசாக ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 200 மொபைல் போன்களும், 4ம் பரிசாக ரூ. 2,000 மதிப்புள்ள 2,000 சமையல் அறை பொருட்களும், 5ம் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள 20 ஆயிரம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. வணிக திருவிழா பரிசுகளை அறிவித்த முதல்வர் ரங்கசாமி, விழா தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.