பொங்கலோ பொங்கல் 2021

செய்திகள்
business directory in tamil

உழவர்கள் ஆடி மாதம் முதல் உழைத்து சேகரித்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்குக் கொண்டுவந்து, ருசிக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் என்பார்கள்.

ஜனவரி 14ம் தேதி (சார்வரி ஆண்டு, தை மாதம், 1ஆம் தேதி) 10.30 மணி முதல் 12.00 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்குப் பூஜை செய்யவும் சிறந்த நேரமாகும்.

சங்க காலத்தில் பெண்கள், நல்ல மழை பெய்யவும், நிலம் செழிக்கவும் விரதம் தொடங்கி, தை 1ஆம் தேதி விரதம் முடிப்பார்கள். தமிழகத்தில் நான்கு நாட்களுக்குப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள்தான் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டின் கூரையில் பூ செருகி, வீட்டில் தேங்கி இருக்கும் பழைய உபயோகமற்றவற்றை அப்புறப்படுத்திவிட்டு வீடு தூய்மையாக்கப்படும். அவ்வாறே கெட்ட சிந்தனைகளை களைந்து, நல்ல சிந்தனைகளை இப்பொங்கல் திருநாளில் வளர்த்துக் கொள்ளவோம்.

ஆடிப் பட்டம் தேடி விதைத்த நெல்லை அறுவடை செய்து, புதிய அரிசியை, மண் பானையில் வைத்து, வாசலிலே வண்ண கோலமிட்டு, மஞ்சள் கட்டி, திருநீறும், குங்குமமும் வைத்து, வெள்ளம், பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராச்சை சேர்த்து சூரியனுக்குப் பூஜை செய்வார்கள். அப்போது பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் கூடிப் “பொங்கலோ பொங்கல்” என்று கூவி மகிழ்வார்கள்.

உழவுத் தொழிலுக்கு உதவி புரியும் மாடுகளைக் கடவுளாகவே வணங்குவது நம் வழக்கம். தொழுவத்தில் இருக்கும் மாடுகளை குளிப்பாட்டடி, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, திருநீறு பூசி, வண்ண மலர் மாலை சூட்டி, கொம்புகளுக்கு வண்ணம் இட்டு, கால்களில் சலங்கை பூட்டி, தீபாராதனை காண்பிப்பார்கள். இதை மாட்டுப்பொங்கல் என்பார்கள். இந்நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும்.