பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

NRI தமிழ் டிவி THE RISE அரசியல் உலகம் சிறப்பு சுற்றுலா தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் முதன்மை செய்தி

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த ஏரி தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொன்னேரியை ஆழப்படுத்தவும், ஆக்கிரமிப்பை அகற்றவும், போதிய நீரினை தேக்கி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சோழகங்கம் பொன்னேரி மீட்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கரை பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் முல்லைநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ் மையம் அமைப்பின் இயக்குனரும், கத்தோலிக்க பாதிரியாருமான ஜகத் காஸ்பர் கலந்துகொண்டார்.

மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்றும் ஏரியினை தூர்வார மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பொன்னேரியை ஆழப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனவரி மாதம் 6-ந்தேதி மாரத்தான் போட்டி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *