பொன்னியின் செல்வம் – இந்திய சினிமாவின் பொக்கிஷம்

இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் யாராக இருந்தாலும் இந்த புத்தகத்தின் பெயரை கடந்துபோகாமல் இருந்திருக்க மாட்டார்கள். அதே போல தங்களுக்கு மிகவும் கவர்ந்த புத்தகங்கள் வரிசையில் இந்த புத்தகத்திற்கு நிச்சயமாக இடமுண்டு. அப்படிப்பட்ட நாவலின் பெயர் தான் பொன்னியின் செல்வன். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நாவல் இப்போது திரைப்படமாகி விரைவில் திரையில் வரவிருக்கிறது.
பொன்னியின் செல்வன் என்ற தொடர் முதன்முதலில் கல்கி என்னும் வாரஇதழில் வார பதிப்பாக வரத்தொடங்கியது. கல்கி நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி இத்தொடரை எழுதி வந்தார். 1950களில் ஆரம்பித்த இத்தொடர் 1954ல் நிறைவுற்றது. பின்னர் இந்தொடர் மிக மிக பிரபலம் ஆகவே பொன்னியின் செல்வன் என்ற பெயரில் புத்தகமாகவே வெளியானது. இதில் மொத்தம் ஐந்து பாகங்கள்.
பொன்னியின் செல்வன் அதாவது பொன்னி காவிரி நதியை குறிப்பதாகவும், செல்வன் என்பது சோழ பேரரசின் மாமன்னன் ராசராசனையும் குறிப்பதாகும். பொன்னியின் செல்வன் நாவல் சோழ ராஜ்யத்தின் சிறப்பையும் இளவரசர் அருள்மொழிவர்மன், படைதளபதி வந்தியத்தேவன், இளவரசி குந்தவை நாச்சியார், பாண்டிய இளவரசி நந்தினி, இளவரசர் ஆதித்ய கரிகாலன், பழுவேட்டரையர் சகோதர்கள் என இவர்களைச் சுற்றி நகரும் கதையாகும். இது பத்தாம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த சம்பவங்கள், அது பயணிக்கும் ஊர்களை வைத்து எழுதிய கதையாகும்.
1950களில் வெளியான இப்புத்தகம் பல திரை ஜாம்பவான்களால் வெகுவாக கவரப்பட்டு திரைப்படமாக்கும் முயற்சிகள் பல நடந்தன. 1970 தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய எம்ஜிஆர் இந்நாவலை திரைப்படமாக எடுக்க பெரிதும் முயற்சி செய்தார். இது தனது மிகப்பெரிய கனவாக பெருமைப்பட்டுக்கொண்டார். எனினும் அவரது முயற்சி தொடங்கப்பட்டு நின்றுபோனது. பின்னர் கமல்ஹாசன் இதனை திரைப்படமாக எடுக்க முயற்சியெடுத்தார். அதுவும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. 2020ம் ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பதாக பிரபல இயக்குனர் மணிரத்னம் அறிவித்தார். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் பாகம் வெளியாகவுள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னியின் செல்வன் மிகவும் முக்கியமானதாக, பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்நாவல் திரைப்படமாக வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.