பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு காட்சிகள் சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.