காங்கிரசில் இணைகிறாரா அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

இந்தியா செய்திகள்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது கட்சியில் தலைமை மீது அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் வரப் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பெரும் சுமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதற்கான பல்வேறு செயல்திட்டங்கள் பற்றி சோனியா மற்றும் ராகுல் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆலோசனை நிபுணர் பிரசாந்த் கிஷோர் டில்லியில் சோனியா மற்றும் ராகுலை இன்று சந்தித்து பேசியுள்ளார். அவர் சென்ற ஆண்டே காங்கிரசில் இணைய விரும்பியதாகவும், அவர் கேட்ட பதவியை உருவாக்கி தர கட்சித் தலைமை சம்மதிக்காததால் கசப்புடன் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

எப்பாடு பட்டாவது கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கும் சோனியா மற்றும் ராகுலுடன் பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.