கொரிய தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கொரிய தமிழ்ச் சங்கம், கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர் ஒருமுறை மட்டுமே பொறுப்பு வகிப்பது என்கிற மரபை கொரிய தமிழ்ச் சங்கம் பின்பற்றி வருகிறது.
அவ்வகையில், புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமைக் குழுவினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் கடந்த 2022 நவம்பர்-டிசம்பர் காலத்தில் நடைபெற்றது. அதன்படி புதிய தலைவராக திருச்சியை சேர்ந்த முனைவர் செல்வராஜ் அரவிந்தராஜா துணைத்தலைவராக தஞ்சையைச் சேர்ந்த திருமிகு தெட்சிணாமூர்த்தி விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதே போல் சங்கத்திற்கு செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் போன்ற மற்ற பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எதிர்வரும் தைத்திங்கள் 29-ம் நாள் அன்று சியோல் கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் தமிழர் திருநாள் – 2023 நிகழ்வில் கொரியவாழ் தமிழ் மக்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் முறைப்படி பொறுப்பேற்பார்கள்.