சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால், சுப்பிரமணிய பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றப்பட்டது; ஜனாதிபதி பெயர்பலகையை திறந்து வைத்தார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரதியார் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயர் பலகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக இணை வேந்தரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 100 மாணவர்களுக்கு தனது கைகளால் பட்டமும், பதக்கமும் வழங்கினார். விழாவில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் உட்பட 565 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில் மொத்தம் 762 பேர் பட்டம் பெற்றனர்.
அதுமட்டுமல்லாமல் சென்னை பல்கலையுடன் இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 89,934 மாணவர்களும், தொலைதூரக்கல்வியில் பயின்ற 12,166 பேரும், பல்கலைக்கழக வளாகத்தில் பயின்ற 1,367 மாணவர்கள் உட்பட மொத்தம் 1,04,416 பேர் பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடினமாக உழைத்து உங்கள் கனவுகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பாரதியின் கூற்றுப்படி, அனைத்தும் கற்க வேண்டும். உங்கள் வாழ்வில் இது பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரதியார் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயர் பலகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.
விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேயர் பிரியா, முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள், தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.